அதுக்குள்ளவா…? இணையத்தில் லீக்கான “லால் சலாம்” பதறிப்போன படக்குழு!

Author: Rajesh
9 February 2024, 10:48 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது. படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் படம் வெளியாகிய வேகத்தில் படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக்காகி தீயாய் பரவி வருகிறது. படத்தை பார்க்கும் ரசிகர்கள் பரவசம் அடைந்து ரஜினி இடம்பெறும் காட்சிகளை மட்டும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனால் படக்குழு அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அதிவேகமாக ஆக்ஷன் எடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் லைக்கா, தரப்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி வீடியோ எடுத்து பதிவிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என கடுமையாக கண்டித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 276

    0

    0