நான் கேட்டது 60 கோடி.. ஆனா கொடுத்தது.. லால் சலாம் படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்..!
Author: Vignesh1 February 2024, 2:45 pm
கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.
இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரகாந்த் நடிக்கிறார்கள். இந்த படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி உலகெங்கும் பிரம்மாண்டமாக இப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த்துக்கு 40 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 கோடி பேசப்பட்ட நிலையில், மகளுக்காக மனம் இறங்கிய ரஜினி 40 கோடியை வாங்கியுள்ளாராம்.