காத்துவாங்கும் ‘லால் சலாம் ’ – 3 நாள் வசூல் நிலவரம் இதோ..!

Author: Vignesh
12 February 2024, 9:00 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இப்படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இப்படம் தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது. படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

lal-salaam - updatenews360

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தின் 3வது நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள லால்சலாம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை உலக அளவில் 22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்த்தை விட குறைவான வசூல் தான் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

lal salaam

மேலும், ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூபாய் 98 கோடி வசூலை வாரி குவித்து இருந்தது. அதில், 10 சதவீதம் கூட இந்த திரைப்படம் எட்டாதது தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 452

    0

    0