பாகுபலி நடிகர் மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு.. ரவுடிகளை ஏவி மிரட்டியதாக புகார் : நேரில் ஆஜராக சம்மன்..!
Author: Vignesh13 February 2023, 12:30 pm
டோலிவுட்டில் ராணா டகுபதி முக்கிய நடிகர்களில் ஒருவர் இருந்து வருகிறார். ராணா டகுபதி ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார். கடந்த வருடம் அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரைக்கு வந்தது.
இந்நிலையில், ராணாவின் தந்தை சுரேஷ் பாபு ஒரு பிரபல தயாரிப்பாளர் தான். ராணாவின் தந்தை பல முக்கிய படங்களை தயாரித்து உள்ளார்.
இதனிடையே, ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் நிலத்தை அபகரிக்க பார்ப்பதாக பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீதுவழக்கு பதிவு செய்து இருக்கிறார்.
Film Nagar Cooperative Societyல் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறும்படி ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் ஆஜராகும்படி ராணாவுக்கும் அவரது தந்தைக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.