மாரிமுத்துவின் கடைசி படம்.. வெளியானது ஃபஸ்ட் லுக் போஸ்டர்..!

Author: Vignesh
9 October 2023, 5:45 pm

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்து உள்ளனர்.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து TRP’யில் முதல் இடத்திலும் சமூகவலைகளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த மாரிமுத்து இறந்துவிட்டதால் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பது குறித்த சமீபத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த குணசேகரனாக பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க போகிறார் என்ற செய்திகள் வெளியானது.

ethir neechal-updatenews360

தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக, எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை முதலில் வேல ராமமூர்த்தி மறுத்ததாகவும், படக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆதி குணசேகரனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆதி குணசேகராக வேல ராமமூர்த்தி நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகி உள்ளது.

marimuthu - updatenews360

இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்துள்ள வீராயி மக்கள் என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் மாரிமுத்து, இப்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தியுடன் இணைந்து நடித்து உள்ளனர்.

marimuthu - updatenews360
  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…