சொர்க்கத்தில் சந்திக்கிறோம்.. மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி உருக்கம்..!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர் தான் சேதுராமன்.

இப்படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சரும நிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனையையும் 2016ம் ஆண்டு திறந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவரின் இறப்பு எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சேதுராமன் இறப்பின் போது இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவி அந்த நேரத்தில் 5 மாதமாம். சேதுராமன் இறப்பிற்கு பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் மற்றும் மருத்துவமனையை அவரது மனைவி உமா தான் பார்த்துக்கொண்டு வருகிறார்.

அவர் மறைந்த நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சேதுவின் பழைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை உமா பகிர்ந்து உள்ளார். அதில், 1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது. உடலளவில், நீங்கள் பிரிந்தாலும் உங்களது நினைவுகள் வலுவாக எங்களை வழி நடத்துகிறது.

வாழ்க்கை குறுகியது என்பதை ஏற்றுக் கொள்வது எளிதல்ல, எங்களுடைய கடினமான சமயத்தில், ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள். மார்ச் 25 2020 அன்று கோவிட் லாக்டவுனுடன் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்து பலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. ஏன் குடும்பத்தை தனியாக விட நினைக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லி மக்களுக்கு நேர்மறை எண்ணங்களை வழங்கும் பல பதிவுகளை வெளியிட்டீர்கள்.

எங்களின் கடினமான நேரங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். அப்பா எப்போது வருவார். அவரை நாம் சர்ப்ரைஸ் செய்யலாம் என சஹானா கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவளுக்கு அப்பா வரமாட்டார் என்பது தெரியாது. அவளும் நானும் நிச்சயமாக ஒரு நாள் உங்களை சொர்க்கத்தின் சந்திக்கிறோம். அதுவரை எங்களை வழிநடத்திக் கொண்டே இருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த பதிவு தற்போது இணையதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Poorni

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

6 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

8 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

8 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

9 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

9 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

9 hours ago

This website uses cookies.