மறைந்த நடிகரின் பொருட்களை பொக்கிஷமாக சேகரித்து வைத்த மனைவி : நெகிழ வைக்கும் வீடியோ!!
Author: Vignesh7 December 2022, 6:15 pm
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர் தான் சேதுராமன்.
இப்படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சரும நிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.
சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனையையும் 2016ம் ஆண்டு திறந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவரின் இறப்பு எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மனைவியின் பதிவு
சேதுராமன் இறப்பின் போது இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவி அந்த நேரத்தில் 5 மாதமாம். சேதுராமன் இறப்பிற்கு பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் மற்றும் மருத்துவமனையை அவரது மனைவி உமா தான் பார்த்துக்கொண்டு வருகிறார்.
அதில் அவர்,
இன்று உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. நீங்கள் என் அருகில் இருப்பதை என் மூளை ஒரு நிமிடம் உணர்ந்தது. என்னுள் உன்னை மட்டுமே உணரமுடியும் என்று உன்னைத் உன்னை ஆரம்பித்தேன். நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என நீண்ட பதிவு போட்டுள்ளார்.