விபத்தில் சிக்கி மரணமடைந்த சௌந்தர்யாவின் கணவர் இவரா?.. வைரலாகும் UNSEEN போட்டோ..!
Author: Vignesh29 February 2024, 11:23 am
90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
பொன்மணி, படையப்பா, அருணாச்சலம், தவசி, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளியான படங்களில் இவரது நடிப்பு இன்றும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை சௌந்தர்யா, 2004ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பையும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்பத்தியது. இதில் சௌந்தர்யா, அவரின் சகோதரர், நண்பர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை பல வருடங்களாக நடந்து வந்த நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது வெளிவந்துள்ளது.
அதில் விமானத்தை 100 அடிக்கு மேல் பறக்க ஆரம்பிக்கும் போது வழியில் பல பறவைகள் முட்டுக்கட்டையாக பறந்து இருந்திருக்கிறது. அப்போது விமானி பறவைகளை திசைதிருப்ப முயற்சி செய்த, அந்த நேரத்தில் தான் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அண்மையில் நடிகை சௌந்தர்யா குறித்து அவரது அண்ணியார் ஒரு விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது அவர் இறக்கும் நாள் அன்று கடைசியாக அவர் காட்டன் புடவையும், குங்குமமும் கேட்டதாக வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
இவரது இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்த நிலையில், சௌந்தர்யா மரணம் அடையும் போது ஏழு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு ரகு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சௌந்தர்யா மற்றும் ரகு ஸ்ரீதரின் திருமண புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.