GOAT-படத்தில் பவதாரிணி?.. யுவன் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளாராம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

Author: Vignesh
14 June 2024, 6:43 pm
goat
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

Goat vijay

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்பட பணிகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட பணிகள் ஏறத்தாழ முடிவுற்று உள்ளது.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: பொசுக்கு பொசுக்குனு வளந்துடறாங்க.. பிகில் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பிரஜூனாவா இது..!

இந்நிலையில், கோட் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரி பவதாரணியை பாட வைக்க முடிவு செய்திருந்த நிலையில், தான் பவதாரணி உடல்நிலை குறைவு ஏற்பட்டு பின்பு அவர் இலங்கைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருடைய இறப்பு நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தனது சகோதரியை கோர்ட் படத்தில் ஒரு பாடலை பாட வைக்க வேண்டும் என யுவன் நினைத்தார். ஆனால், அது முடியாமல் போன நிலையில் AI மூலம் பயன்படுத்தி கோட் படத்தில் மெலடி பாடல் ஒன்றை பாட வைத்துள்ளாராம். இது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை தொடும் பாடலாக அமையும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Views: - 58

0

0

Leave a Reply