இறுதி கட்டத்தை நெருங்கும் லியோ Shooting… வேற லெவல் அப்டேட் இதோ!

Author: Shree
22 May 2023, 12:27 pm

கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

மேலும் இதையடுத்து ஒரு சில முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளார்களாம். இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே படத்தை காண தளபதி ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு இருங்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 483

    0

    0