“என்னோட டைட்டில் மரியாதைக்கு கூட 100th dayக்கு கூப்படல தேங்க்ஸ்”: வைரலாகும் பிரபலத்தின் ட்வீட்..!

Author: Rajesh
23 February 2023, 5:08 pm

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும், OTTயில் வெளியான போது சற்று மாறாகவே விமர்சனம் கிடைத்தது.

இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதையொட்டி இந்த வெற்றியை படக்குழு கொண்டாடியது. இப்படி ஒரு நிலையில், விஜய்யின் லவ் டுடே படத்தின் இயக்குனரின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. லவ் டுடே என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. இந்த பெயரை கொடுத்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், ஆர்பி சவுத்ரி மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி என்று படத்தின் ஹீரோ பிரதீப் ட்வீட் போட்டிருந்தார். இவரின் ட்வீட் வைரலானதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் விஜய் குறித்து பிரதீப் செய்த கமெண்ட் வைரலாகி, அன்று விஜய்யை கலாய்த்துவிட்டு இன்று அவர் படத்தின் தலைப்பையே வைத்து இருக்கிறார் என விஜய் ரசிகர்கள் கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1524

    69

    19