“விடாமுயற்சி”யை குழிதோண்டி புதைத்துவிட்டாரா அஜித்…? மீண்டும் பைக் ரைடு சென்றதால் ரசிகர்கள் கவலை!

Author: Shree
2 August 2023, 1:33 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார். குறிப்பாக பைக் ரேஸில் ஆர்வமிக்கவர் அஜித். அவர் வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மேலும், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து பைக் ரெய்டு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதனிடையே அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருந்தும் அப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து பைக் ரெய்டு செல்வதை அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்த பின்னர் ரிலாக்ஷேஷனுக்காக தான் பைக் ரெய்டு செல்வார். ஆனால், தற்போது கேப் விட்டு கேப் விட்டு பைக்கிலே டூர் செல்வதால் ரசிகர்கள் அஜித் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்மையில் தான் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பினார். தற்போது மீண்டும் பைக்கிலே வேர்ல்ட் டூர் ட்ரிப் அடித்துள்ளார். சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர் அப்போ “விடாமுயற்சி” திரைப்படம் அதோகதி தானா? என அப்செட் ஆகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 323

    0

    0