எறிந்த முகத்தோடு ஆக்ரோஷமாக மோதும் அர்ஜுன் – “லியோ” சண்டை காட்சி லீக்!
Author: Shree9 May 2023, 6:54 pm
கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். தற்போது சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டூடியோவில் விஜய் மற்றும் அர்ஜுனின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அர்ஜுன் பாதி எரிந்த முகத்துடன் இருக்கிறார் என்றும் விஜய் உடன் அர்ஜுன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதாகவும் சமீபத்திய தகவல் ஒன்று லீக் ஆகி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ கதையை தழுவியது என்று தகவல்கள் வெளியானது.இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் ஹெட் மிகக்கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். எனவே அதை அர்ஜுனிடம் லேயோ படத்தில் எதிர்பார்க்கலாம்.