ட்விட்டர் கணக்கால் சர்ச்சை.. விளக்கம் கொடுத்த லதா ரஜினிகாந்த் தரப்பு..!
Author: Vignesh6 November 2023, 7:11 pm
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. திரைஇப்படம் படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்தனர்.
சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு எது என இன்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது, வியோ படம் பல இடங்களில் ஜெயிலர் பட வசூலை தொடவில்லை என ரசிகர் ஒருவர் போட்ட ட்விட்டை லதா ரஜினிகாந்த் லைஃக் செய்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், தற்போது லதா ரஜினிகாந்த் தரப்பு இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது.@latharajnikanth என்ற பெயரில் இருக்கும் ஐடி தான் லதா ரஜினிகாந்த்தின் அதிகாரப்பூர்வ கணக்கு என தெரிவித்துள்ளனர்.