2 வருடம் தூக்கமில்லா இரவுகள்; ஸ்ட்ரெஸ்; ஆனா பலன் இப்போ கிடைச்சிருக்கு; முன்னணி நடிகை பகிர்ந்த அப்டேட்

Author: Sudha
21 July 2024, 3:23 pm

நடிகை சனுஷா குழந்தை நட்சத்திரமாக காசி திரைப்படத்தில் அறிமுகமானார்.பிறகு ரேனி குண்டா,கொடிவீரன் ஒன்ற திரைப்படங்களில் நடித்தார். 2 வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி படிப்பின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போது இன்ஸ்டாவில் சனுஷா போட்டிருக்கும் ஒரு பதிவு நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகிறது.

சனுஷாவின் பதிவில் அவர் கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள், கடினமான பணிகள், உடல் நலக்குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து இந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை இப்போது பெற்றுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C9kF6dfoJb5/?utm_source=ig_web_copy_link

மேலும் எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு தேவைப்படும் போதெல்லாம் என்னுடன் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த வெற்றியை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன்.நான் இப்போது நெதர்லாந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்த எம்.எஸ்.சி பட்டதாரி என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.” என்று மகிழ்வுடன் பதிவிட்டு இருக்கிறார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?