பணம் இருந்தால் பாட்ஷா தான்… மீண்டும் அடுத்த படத்துக்கு ரெடி ஆன லெஜண்ட் சரவணன்!

Author: Shree
3 July 2023, 5:22 pm

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராத ஆசை, காதல் இருக்கும் அதை எப்படியாவது, அடையவேண்டும் என தங்களது வாழ்நாளில் போராடி ஜெயித்து காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான குறிப்பாக சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி, பொங்கல் நாட்களில் கலர் கலர் ஆடைகளை அணிந்துக்கொண்டு இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வார்.

இவரது நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வெளியானாலும் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களே அவரது விளம்பரத்திற்காக காத்திருந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு எழுந்தது. அதற்காக தன்னிடம் கொட்டிக்கிடக்கும் பல கோடி பணத்தை வைத்துக்கொண்டு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் ” தி லெஜெண்ட் “

பலகோடி செலவில் உருவாகி வெளியான இப்படம் லாபத்தை ஈட்டவில்லை. ஆனால், அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டுபோகாமல் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கூட புதிய லுக்கில் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகியது. ஆம், லெஜெண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் லெஜண்ட் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு கதையை தற்போது தேர்வு செய்து ஓகே சொல்லிவிட்டாராம். அதற்காக முன்னணி நடிகை ஒருவரை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். எனவே கூடிய சீக்கிரத்தில் லெஜெண்ட் சரவணனின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகலாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0