மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராத ஆசை, காதல் இருக்கும் அதை எப்படியாவது, அடையவேண்டும் என தங்களது வாழ்நாளில் போராடி ஜெயித்து காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான குறிப்பாக சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி, பொங்கல் நாட்களில் கலர் கலர் ஆடைகளை அணிந்துக்கொண்டு இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வார்.
இவரது நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வெளியானாலும் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களே அவரது விளம்பரத்திற்காக காத்திருந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு எழுந்தது. அதற்காக தன்னிடம் கொட்டிக்கிடக்கும் பல கோடி பணத்தை வைத்துக்கொண்டு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் ” தி லெஜெண்ட் “
பலகோடி செலவில் உருவாகி வெளியான இப்படம் லாபத்தை ஈட்டவில்லை. ஆனால், அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டுபோகாமல் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் இந்த காக்கா கழுகு கதையை ரஜினி ஆரம்பித்துவிட்டு பின், பலரும் இதை தொடர்ந்து பேசி வருகிறார்கள். லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட தளபதி விஜய் இதை கிண்டல் செய்யும் வகையில் பேசி இருப்பார். அதை தொடர்ந்து தற்போது நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் இதுகுறித்து மேடையில் பேசி உள்ளார். இதில் ‘இந்த காக்கா கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம் அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்கள் யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை’ என கூறி உள்ளார். இவர் பேசிய ரஜினிகாந்துக்கு பதிலடி என்பது போல் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.