விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள். இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
இதனிடையே, குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கிய நிலையில், திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
மேலும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நிறுவனத்தின் அடுத்த விளம்பர படத்தில் குக் வித் கோமாளி சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்ற ஸ்ருதிகா மற்றும் கோமாளி மணிமேகலை ஆகிய இருவரும் நடித்துள்ளார்களாம்.
இதுதொடர்பான புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நேற்று சரவணன் அவர்களுடன் விளம்பர படப்பிடிப்பு கலந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், சரவணன் அவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர், அவருடன் நடித்த இந்த படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது என்றும், அதுமட்டுமின்றி எனது பைத்தியக்கார தோழி ஸ்ருதிஹாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து பணி புரிந்துள்ளேன் எனக் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.