எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ.. கடை ஊழியர்களை மெண்டல் டார்ச்சர் செய்யும் லெஜெண்ட் சரவணன்!
Author: Rajesh11 January 2024, 7:02 pm
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராத ஆசை, காதல் இருக்கும் அதை எப்படியாவது, அடையவேண்டும் என தங்களது வாழ்நாளில் போராடி ஜெயித்து காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான குறிப்பாக சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி, பொங்கல் நாட்களில் கலர் கலர் ஆடைகளை அணிந்துக்கொண்டு இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வார்.

இவரது நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வெளியானாலும் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களே அவரது விளம்பரத்திற்காக காத்திருந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு எழுந்தது. அதற்காக தன்னிடம் கொட்டிக்கிடக்கும் பல கோடி பணத்தை வைத்துக்கொண்டு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் ” தி லெஜெண்ட் “
பலகோடி செலவில் உருவாகி வெளியான இப்படம் லாபத்தை ஈட்டவில்லை. ஆனால், அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டுபோகாமல் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கூட புதிய லுக்கில் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகியது.

இந்நிலையில் லெஜண்ட் சரவணனின் கடையில் ஊழியர்கள் அவரால் மெண்டல் டார்ச்சர் அனுபவித்து வருகிறார்களாம். ஆம், தான் நடித்த லெஜண்ட் படத்தின் பாடல்களை 24 மணி நேரமும் அந்த கடையில் விஷுவல் ஆக ஒளிபரப்பி வருகிறார்களாம். இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களே மண்டை பிழித்துக்கொண்டு ஓடுகிறார்களாம். பாவம் அங்கு வேலை செய்பவர்களின் நிலைமை தான் ரொம்ப மோசம். அதை சொல்ல கூட முடியாமல் மெண்டல் டார்ச்சர் அனுபவித்து வருகிறார்களாம் கடை ஊழியர்கள்.