கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த லெஜெண்ட் சரவணன்..வெளிவந்த புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Selvan
9 December 2024, 2:57 pm

மாஸ் லுக்கில் லெஜண்ட் சரவணன்

2022-ல் லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்.

Legend Saravanan Georgia shooting

தனது முதல் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின்,தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார்.இப்படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு நடனம் ஆடிய யோகி பாபு…10M VIEWS கடந்த காதலிக்க நேரமில்லை படப் பாடல்..!

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பயல் ராஜ்புட், ஷாம், மற்றும் ஆண்ட்ரியா முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்திற்கான போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் அவர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!