அடுத்த அவதாரம் எடுத்த தி லெஜண்ட் ஹீரோ.. ‘இனி 24 மணி நேரமும் இப்படி தான்’.. புதிய முயற்சிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து..!

Author: Vignesh
5 October 2022, 3:00 pm

தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகிவிட்டார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

வீட்டில் இடம் கொடுத்த லெஜண்ட் சரவணன்:

இந்நிலையில், தற்போது அனைவருக்கும் சப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆம், 24 மணி நேரமும் அன்ன தானம் நடைபெறுகிறது என்றும் தன்னுடைய சொந்த வீட்டில் பொது மக்களுக்கு இடம் எப்போதும் உண்டு என்றும் கூறி பதிவுசெய்துள்ளார் லெஜண்ட் சரவணன். இதனிடையே, இவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி