லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? ஷாரூக்கானையே ஓரம்கட்டிவிட்டார்!
Author: Shree6 July 2023, 9:10 am
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராத ஆசை, காதல் இருக்கும் அதை எப்படியாவது, அடையவேண்டும் என தங்களது வாழ்நாளில் போராடி ஜெயித்து காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான குறிப்பாக சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி, பொங்கல் நாட்களில் கலர் கலர் ஆடைகளை அணிந்துக்கொண்டு இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வார்.
இவரது நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வெளியானாலும் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களே அவரது விளம்பரத்திற்காக காத்திருந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு எழுந்தது. அதற்காக தன்னிடம் கொட்டிக்கிடக்கும் பல கோடி பணத்தை வைத்துக்கொண்டு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் ” தி லெஜெண்ட் “
பலகோடி செலவில் உருவாகி வெளியான இப்படம் லாபத்தை ஈட்டவில்லை. ஆனால், அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டுபோகாமல் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கூட புதிய லுக்கில் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் பிரம்மிக்க செய்துள்ளது. ஆம்,பிரம்மாண்ட வீடு, தொழில், பிசினஸ், பங்களா, வைரம் , வைடூரியம், தங்கம் என நகைகள், சொகுசு கார்கள் என பிரம்மாண்ட ஆடம்பர வாழ்க்கை வாழும் தி லெஜண்ட் சரவணனின் மொத்த சொத்து மதிப்பு 750 மில்லியன் டாலராம். இந்திய மதிப்பில் ரூ. 6177ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், ஷாருக்கான் 730 மில்லியன் சொத்து வைத்துள்ளார். அது இந்திய மதிப்பில் ரூ. 6142 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லெஜண்ட் சரவணன் ஸ்டார் நடிகர் ஷாரூக்கானையே மிஞ்சிவிட்டார்.