விஜய்யுடன் இணையும் LEGEND சரவணன்? அந்த விஷயத்தில ரெண்டு பேருக்கும் அது பொருந்தும்…! வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்..!
Author: Vignesh21 February 2023, 1:30 pm
கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும், ‘வாரிசு’ படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறி, அதன் சக்ஸஸ் பார்ட்டியையும் படக்குழுவினர் கொண்டாடி விட்டனர். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
வாரிசு படத்தின் வெளியீட்டின் போது இனிமேல் தளபதி 67 படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகிவிட்டார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் லெஜண்ட் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே, லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவதால் இந்த குழப்பம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் லெஜண்ட் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், அப்படி எடுத்துவும் நடக்கவில்லை எனவும், காஷ்மீர் சென்றிருக்கும் லெஜண்ட் சரவணன், அங்கிருந்து தான் எடுத்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளாரே தவிர, லியோ படத்தில் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
#Legend in #Kashmir #TheLegend#LegendSaravanan pic.twitter.com/fYYZ3RsvvD
— Legend Saravanan (@yoursthelegend) February 21, 2023