பழம்பெரும் பாடகர் கேஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. திரையுலகம் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2025, 10:29 am
தனித்துவமான குரலால் இந்திய சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் கேஜே யேசுதாஸ். மலையாளம்,தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
இதையும் படியுங்க: தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!
கொஞ்சும் குமரி படத்தில் ஆசை வந்த பின்னே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், டிராஜேந்தர், தேவா, வித்யாசாகர், ஏஆர் ரகுமான், அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
தமிழில் மட்டும் 700 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள கேஜே யேசுதாஸ்க்கு தற்போது வயது 85. எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல தலைமுறை நடிகர்களுக்காக பாடியுள்ளார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேஜே யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாசும் தனது தந்தையை போல குரலில் சாயல் கொண்டவர். இவரும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடலை பாடி வருகிறார்.
யேசுதாஸ் உடல்நிலை மோசமாக உள்ளதாக வெளியான தகவலையடுத்து உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.