‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!

Author: Vignesh
15 May 2024, 11:15 am
lekha washington
Quick Share

இம்ரான் கான் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். கடந்த 2011ம் ஆண்டு இம்ரான் கான் அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இம்ரான் கான் ஜோடி கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனிடையே, நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகை லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

lekha washington - updatenews360

அதை உறுதி செய்யும் விதத்தில் நடிகை லேகா மற்றும் நடிகர் இம்ரான் கான் பொது இடத்தில் காதல் ஜோடிகளை போல் ஒன்றாக கைகோர்த்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

lekha washington - updatenews360

இதை பார்த்தவுடன் ரசிகர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளது என்றே உறுதி செய்துவிட்டனர். நடிகை லேகா தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த கல்யாணம் சமையல் சாதம், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் வேறு யாருமில்லை நடிகர் அமீர்கானின் உறவினர் இம்ரான் கான் தானாம். இது குறித்து இம்ரான்கான் ஒரு பேட்டி என் வாழ்வில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா வாஷிங்டன் தான் ஏற்படுத்தினார். நான் மன அழுத்தத்தில் இருந்தபோது எனக்கு உதவியாக அவர்தான் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். அவர் இல்லாமல், ஒரு வாழ்க்கையில் என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை என பேசி உள்ளார். தற்போது, காதலை இம்ரான் கான் உறுதிப்படுத்த அனைவரும் இந்த புது ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இம்ரான் கான் அவந்திகா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 116

0

0