LEO இசை வெளியீட்டு விழாவுக்காக பிரம்மாண்டமாக தயாரான Promo : வாயடைத்துப் போன ரசிகர்கள்!

Author: Vignesh
28 September 2023, 6:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், லியோ இசை வெளியிட்டு விழாவிற்காக தயார் செய்து வைத்திருந்த ப்ரோமோ வீடியோ இதுதான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!