வடிவேலுவின் BGM-மை அட்ட காப்பி அடித்த அனிரூத்.. வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
28 September 2023, 5:15 pm

கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர். அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது.

UpdateNews360_Aniruth

அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ஜெயிலர், ஜவான், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது வெளியானது.

இதனிடையே, அனிருத் இசையமைத்துள்ள லியோ படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே, பிரமோ வீடியோவும் 28 ஆம் தேதி காலை 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். அனிருத் சமீபத்தில் காப்பி பாடல்களை கொடுக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில், லியோ படத்தில் வரும் Badass பாடலின் பிரமோ வெளியானது. அதில், இடம்பெற்றுள்ள பிஜிஎம் வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள அடிவாங்கும் BGM-ஐ அப்படியே காப்பி அடித்து இருக்கிறார் அனிரூத் என்று சிலர் கலாய்த்து வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 497

    0

    0