என்ன லோகேஷ் இது..? ஹாலிவுட் படத்தின் காப்பியா லியோ படத்தின் First Look.. ஆதாரம் வெளியானது..!

Author: Vignesh
22 June 2023, 12:45 pm

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

Vijay - Updatenews360

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு இப்படத்தில் இடம்பெறும் ‘நா ரெடி’ என்ற பாடல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்திருந்தது.

Vijay - Updatenews360

அதையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் 20 செகண்ட்ஸ்க்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நா ரெடி பாடல் இன்று விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று இரவு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து இருந்தது.

leo-updatenews360

வெறித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த போஸ்டரை தற்பொழுது ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருக்கிறது. இந்நிலையில், ஒரு பக்கம் வாழ்த்து மழையில் இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் இந்த போஸ்டருக்கு எதிராக எழுந்து வருகிறது. அதாவது லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

leo-updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 510

    0

    1