கொல நடுங்குது… கொடூர வில்லனா மிரட்டும் ஹரோல்டு தாஸ் அர்ஜுன் – லியோ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்!

Author: Shree
15 August 2023, 8:44 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மாஸான கிளிம்ஸ் வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஆம் சுதந்திரமான இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அர்ஜுனுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் லியோ படக்குழு அவரது ரோலை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் அர்ஜுன் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் நடிப்பு மிரட்டுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 787

    2

    1