லியோ கொஞ்சம் பழைய கதை தான்.. வெளிப்படையாக பேசிய லோகேஷ்..!

Author: Vignesh
19 October 2023, 10:25 am

லியோ திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றனர். ரசிகர்களிடையே லியோ குறித்த எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் பற்றி பேசி உள்ளார்.

சினிமா கண்டுபிடிச்ச காலத்திலிருந்து சொல்லப்படுற பழைய கதை தான் லியோ என்றும், அதை தான் ஆக்சன் ஆகவும் ரசிகர்களுக்கு தியேட்டர் அனுபத்தை கொடுக்கணும் என்கிற மாதிரி மாத்தி சொல்லிட்டேன். எதுவுமே தெரியாம பார்க்கிற ரசிகர்களோட உற்சாகத்தை கொள்ள வேண்டாம் என்று தான் கதையை சொல்லாமல் இருக்கிறேன்.

இந்த படத்திற்காக விஜய் பண்ணின ஹோம் ஒர்க் கொஞ்சம் அதிகம் தான் முதல் ஷாட்ல இருந்து கடைசி வரைக்கும் அவர் படத்தை தாங்கி இருக்கார். என் படங்களில் எப்போதுமே எமோஷன் இருக்கும் அதுவும் இப்படியான எமோஷன்தான் இங்கையும், வச்சிருக்கேன்.

lokesh-kanagaraj-updatenews360

முதலில் மூணாறு பின்னணியில் தான் இந்த கதை எழுதினேன். இந்த கதை நிறைய லைவ் லொகேஷன் தேவைப்பட்டுச்சு, விஜய்யை வச்சு அங்க படப்பிடிப்பு நடத்த வாய்ப்பே இல்லை. அதே மாதிரி செட் போட்டால் அது சரியா வருமான்னு தெரியாது. அதனால, எந்த தொந்தரவும் இல்லாத ஒரு ஏரியா வேணுங்கறதால காஷ்மீரை தேர்வு பண்ணிட்டோம். அங்கிருந்த மக்கள் அவ்ளோ சப்போர்ட் பண்ணாங்க அதனாலதான் 60 நாள் சூட் அங்கே முடிக்க முடிஞ்சுச்சு இதுக்கு நிறையவே ஒர்க் பண்ணி இருக்கோம் என பேசியுள்ளார்.

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…