முடிந்தது லியோ படப்பிடிப்பு… விஜய்க்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
10 July 2023, 7:03 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். விஜய்க்கு நன்றி கூறி ஸ்பெஷல் ட்வீட் செய்துள்ள லோகேஷ் கனகராஜ், “விஜய் நடிக்கும் பகுதி ஷூட்டிங் முடித்துவிட்டது. இந்த இரண்டாவது படத்தையும் ஸ்பெஷலாக ஆக்கியதற்கு நன்றினா” என ட்வீட் செய்து இருக்கிறார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 587

    3

    0