காரா இல்ல கப்பலா.. மீண்டும் சொகுசு காரை வாங்கிய லோகேஷ்.. விலையை கேட்டு பெருமூச்சு விடும் நடிகர்கள்..!

Author: Vignesh
17 August 2023, 9:00 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார்.

இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது.

இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது புதிய bmw 7 சீரிஸ் காரை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு மட்டும் 1.70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

lokesh kanagaraj-updatenews360

இதற்கு முன்னதாக செலக்ஸ் கார் வைத்திருந்தார். அந்த காரை நடிகர் கமலஹாசன் தான் பரிசாக வழங்கினார். அந்த காரின் மதிப்பு 80 லட்சம் ஆகும். தற்போது அதற்கு டபுள் மடங்கு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் காரை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

lokesh kanagaraj-updatenews360
  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 446

    1

    0