விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் வெளியாக வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இப்படி சர்ச்சையில் சிக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கண்டிப்பாக அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ரசிகர்களுக்காக படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், சென்னையில் திரையரங்குக்கு வெளியே ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து இறந்ததை அடுத்து, ஜனவரி 2023 முதல் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள்/ அதிகாலைக் காட்சிகள் நடத்த திரையரங்குகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால் விஜய்யின் ‘லியோ’ படத்தையும் தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்ய முடியாது அறிவித்தனர். ஆனால் சிறப்பு காட்சிகளாக ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னென்றால்,
லியோ படத்தில் விஜய் வில்லன்களுடன் வெறித்தனமாக சண்டைபோடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் லீக்காகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்ததோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.