என்னடா இது மாஸ்டர் ரிப்பீட்டா?.. ‘விருந்தா? மருந்தா?’ லியோ முதல் விமர்சனம்..!

Author: Vignesh
19 October 2023, 9:40 am

லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. பல இடங்களில் அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் போடப்பட்டது. கேரளாவில் 3:50க்கு லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல் சி யுவில் இணைந்துள்ளது.

leo

இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம்மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், காலையிலிருந்து தியேட்டர்களில் ரசிகர்களின் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.

சிங்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் பூனையாகவே உள்ளது. இறுதி முடிவு ஏமாற்றமே, லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விக்ரம் அல்லது கைதி படம் போல் லியோ இல்லை இது லோகேஷ் கேரில் மிகவும் பலவீனமான ஒரு சாதாரண முயற்சியாகவே கருதப்படுகிறது.

படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார்.ஆக மொத்தம் இல்லையோ ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!