உன்ன உள்ள விட்டதே தப்பு – “லியோ” ரகசியத்தை உடைத்த பிரபலம் – செம கடுப்பில் லோகேஷ்!

Author: Shree
23 March 2023, 6:14 pm

கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது படக்குழுவை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து நின்றுக்கொண்டிட்ருந்தனர். அப்போது வழக்கம் போல வீடியோ எடுத்து போடும் பிரபல யூடியூபர் இர்பான் அங்கு இருந்தவர்களையும் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் நடிகர் கதிர் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். என்ன லியோ படத்தில் கதிர் நடிக்கிறாரா? இதை லோகேஷ் அறிவிக்கவே இல்லையே… ஒரு வேலை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தாரோ? என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஒரு நிமிஷத்துல வந்து இப்படி எல்லாத்தையும் அம்பலப்படுத்திட்டியே என லோகேஷ் இர்பான் மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!