திரிஷாவுடன் விஜய் லிப்கிஸ்… அந்த சீனுக்கு தியேட்டரே தெறிக்குது!

Author: Shree
19 October 2023, 6:54 pm

இன்று உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது. சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தாகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இப்படத்தில் விஜய் திரிஷாவின் ஜோடியை திரையில் பார்க்கவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இப்படத்தில் பார்த்திபன் (விஜய்யின்) அன்பான, அழகான மனைவியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் திரிஷா விஜய்க்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இருவரது எமோஷ்னல் ரொமான்ஸ் நம்மை அறியாமலேயே மனதை உருக்குகிறது. ஆம், 20 வருடங்களாக தன்னுடன் வாழ்ந்து வரும் பார்த்திபன் உண்மையிலே பார்த்திபன் தானா அல்லது லியோவா? என அறிந்துக்கொள்ள த்ரிஷா ஒரு டெஸ்ட் செய்கிறார்.

திரிஷாவின் இந்த சோதனையை அறிந்த பார்த்திபன் மனைவி கூட நம்பவில்லையே என உடைந்து அழும் காட்சியில் எல்லோருக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது. அவர் உண்மையிலே தன் கணவர் பார்த்திபன் தான் என நம்பி அவருக்கு லிப்கிஸ் கொடுத்து நான் உன்னை நம்புறேன் பார்த்தி என த்ரிஷா கூறும் அந்த காட்சியில் அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார் லோகேஷ். அந்த காட்சிக்கு திரையரங்கம்மே மெய்சிலிர்த்து விடுகிறது. இந்த காட்சியை பார்த்துவிட்டு த்ரிஷாவின் ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி என கூறி ஆரவாரம் செய்தனர்.

  • Divyadarshini DD Advice to Priyanka Deshpande அடுத்தவங்களுக்கு வழி விடு.. விஜய் டிவி பிரியங்காவை LEFT & RIGHT வாங்கிய டிடி!