விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… “லியோ” திரைப்படம் ரிலீஸ் ஆகாது!

Author: Shree
21 September 2023, 3:37 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆம், லியோ படம் திரையரங்கில் வெளியாகாது என கூறியுள்ளனர். அது குறித்து விரிவான செய்தியை பார்க்கலாம்.

அதாவது ” லியோ” இந்தி வெர்ஷன் திரையரங்கில் வெளியாகாதாம். காரணம், லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ரூல்ஸ் படி, ஒரு படம் வெளிவந்து 8 வாரங்களுக்கு பின் தான் ஓடிடி-ல் வெளியிடுவார்கள். எனவே லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 4 வாரங்களுக்கு பின் ஓடிடி-ல் வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தாலும் தமிழ் வெர்ஷனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் மனதை தேற்றிக்கொண்டனர் தளபதி ரசிகர்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 511

    0

    0