‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’…. ஆக்ரோஷத்தோடு விஜய் “லியோ” ட்ரைலர் ரிலீஸ்!

Author: Shree
5 October 2023, 6:39 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் .இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த டிரைலரில் “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என விஜய் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஒரு விஜய் சீரியல் கில்லராகவும் இன்னொரு விஜய் ஜாக்லெட் பேக்ட்ரி நடத்துபவராகவும் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது.. இதோ அந்த வீடியோ:

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ