இனி ஹோம்லி ரோல் செட் ஆகாது.. 50 வயது நடிகரிடம் சரண்டர் ஆன மடோனா செபாஸ்டியன்..!

Author: Vignesh
15 December 2023, 2:00 pm

மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.

madona sebastian - updatenews360

நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

madonna sebastian - updatenews360

ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு சிலகாலம் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த லியோ படத்தில் விஜயின் தங்கையாக எலிசா தாஸ் ரோலில் மடோனா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா இப்படத்தில் நடித்துள்ளது குறித்து இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில், அடக்கவெடுக்கமாக இருந்த மடோனா தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன் பயனாக நடிகர் பிரபுதேவா நடிக்கும் சக்தி சிதம்பரம் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…