அண்ணன் ரெடி.. விரைவில் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார்.. ‘லியோ’ விழாவில் அர்ஜுன் பேச்சு..!
Author: Vignesh2 November 2023, 9:55 am
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். அந்த வகையில், படம் வெளியான 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா நேற்று இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே அனுமதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும் வருகை தந்து குட்டி கதையை கூறுவார் எனவும் முன்னதாகவே படக்குழு பச்சை கொடி காட்டியது. அதன்படி, விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.
வழக்கமாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய் குட்டி கதை கூறுவார். ஆனால், லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் இந்த லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு விஜய் குட்டிக்கதை சொல்லி அரங்கத்தை தெறிக்க விட்டார்.
லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் பேசுகையில், மக்கள் என்னை எங்கு பார்த்தாலும், ஜெய்ஹிந்த் என்று சொல்வார்கள். இந்த படத்திற்கு த்தேறிக்க என்கிறார்கள். மங்காத்தா படத்தில் திரிஷாவுடன் நடித்தேன். அதன் பிறகு லியோனில் நடித்திருக்கிறேன். இரண்டு படங்களும் ஜோடியாக இல்லை. சிவாஜிக்கு பிறகு விஜயிடம் நேரம் தவறாமையை பார்க்கிறேன். ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7:00 மணிக்கே செட்டுக்கு சென்று விடுவார். அவ்வளவு அர்ப்பணிப்புள்ள சிம்பிளான ஒருவர். விஜய்க்கு தலைவராவதற்கான தகுதி உள்ளது. விரைவில், அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என அர்ஜுன் பேசியுள்ளார்.