Leo Success Meet: மறைமுகமாக தாக்கப்பட்ட ரஜினி.. ‘எவ்ளோ உயர பறந்தாலும்’.. தலைவர் 171 பக்கம் தலைவைக்க முடியாதே..!

Author: Vignesh
2 November 2023, 9:08 am

நடிகர் விஜய் கமர்ஷியல் கிங்க்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து உள்ளார். இவரின் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். ஆனால், இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.

leo-updatenews360

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. பல்வேறு, எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ படம் கலகையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. இந்த படம் வெளியானதில் இருந்து ஜெய்லர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. அந்த வகையில், லியோ திரைப்படம் 12 நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை லியோ திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

leo-updatenews360

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு லியோ படத்தின் வெற்றி விழா உற்சாகத்தை கொடுத்திருக்கிறது, இப்படி ஒரு நிலையில், இந்த விழாவில் பேசிய இயக்குனர் ரத்தினகுமார் எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று பேசி இருக்கிறார். இவர் மறைமுகமாக ரஜினியை தாக்குவது போல் பேசியதாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, ரஜினிக் கூறிய காக்கா கழுகு கதையை மையமாக வைத்து லியோ படத்தின் வெற்றி விழாவில் எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும் என்று இவர் தெரிவித்திருப்பதாக நெட்டிஷன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ரத்தினகுமார் பேசி முடித்த பின்னர் நடிகர் விஜயை கட்டிப்பிடிக்க வேண்டும் என கீழே இறங்க நினைத்தார். அப்போது, விஜயே, மேடைக்கு வந்து ரத்தினகுமாரை கட்டி அணைத்துவிட்டு சென்றுள்ள காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கம் போது அந்த படத்தில் ரத்தினகுமார் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 457

    1

    0