நா ரெடிதான் வரவா… கிடைச்சது கிரீன் சிக்னல்… தடல்புடலாக லியோ படக்குழு செய்த சம்பவம் : ரசிகர்கள் குஷி!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 1:36 pm

நா ரெடிதான் வரவா… கிடைச்சது கிரீன் சிக்னல்… தடல்புடலாக லியோ படக்குழு செய்த சம்பவம் : ரசிகர்கள் குஷி!!!

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1-ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பும் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் காவல் துறை படத்தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு காவல் துறை பதில் கடிதம் நேற்று அனுப்பியது.

அதில் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்? விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என காவல் துறை கேள்விகளை எழுப்பி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது. முறையான அனுமதி கடிதங்களுடன் விண்ணப்பித்ததால் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன.

காவல் துறை 6000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ 10 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் படக்குழுவும் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். மேலும் விஜய் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0