லியோ படத்தில் திரிஷாவின் பெயர் இது தான் – பிறந்தநாளில் வெளியான வெயிட்டான Update!

Author: Shree
4 May 2023, 4:33 pm

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்ற படம் லியோ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் செம ஹிட் அடித்தது தான்.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் உட்பட இன்னும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது.

முதலில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படத்தின் கதை மற்றும் கதைக்களம் போதைப்பொருளைச் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திரிஷாவின் 40-வது பிறந்தநாளுக்கு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து கூறி லியோ படத்தில் அவரது கேரக்டர் பெயர் “அலெக்ஸா”என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய்யின் பெயர் லியோ என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கிறிஸ்து மதத்தவராக நடிப்பதை இந்த பெயர் குறிப்பிடுகிறது. மேலும் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் விஜய் த்ரிஷா இருவரும் பேக்கரி ஒன்றில் இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் சாக்லெட் Factory’யில் வேலை செய்வது போன்று முன்னர் வெளியான வீடியோவில் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 646

    4

    0