ஒரே நாளில் கெத்து காட்டிய தளபதி… மாஸ் ரெக்கார்ட் செய்துள்ள “லியோ” டிரைலர்!

Author: Shree
6 October 2023, 12:06 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நேற்று 6:30மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த டிரைலரில் “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என விஜய் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஒரு விஜய் சீரியல் கில்லராகவும் இன்னொரு விஜய் ஜாக்லெட் பேக்ட்ரி நடத்துபவராகவும் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. மேலும், ‘இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோடி வரணும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த ட்ரைலரை பார்த்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிட்டனர்.

இந்நிலையில் லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து ரெகார்ட் செய்துள்ளது. ஆம், தற்போதுவரை 30M+ பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 381

    3

    0