தோனி தயாரிப்பில் இவானா நடித்திருக்கும் LGM படத்தின் ட்ரெய்லர் இதோ!

Author: Shree
10 July 2023, 8:24 pm

கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது கெரியரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து கள்வன் , LGM உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

LGM படத்தை தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் நடிகை நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்ப்போது அப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த ட்ரைலர்:

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி