“எனக்கு அவார்டு வேண்டாம்”.. கமல் பாணியில் முடிவெடுத்த சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
13 March 2023, 6:45 pm

உலகநாயகன் கமலஹாசன் இந்திய சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பங்களிப்பின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். தற்போது கமல் சினிமாவில் அடுத்து வரும் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிலும் கமலை போலவே பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரும் கமல் பாணியை பின்பற்றி வருகிறார்.

Kamal - Updatenews360

இதனிடையே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும், அவார்டுகளையும் வாங்கி உள்ளார். பின்னர் கமலஹாசன் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு தான் போதுமான அளவு விருதுகளை வாங்கி விட்டேன் என்றும், இனி மேல் தனக்கு விருதுகள் வழங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.

KAMAL HAASAN_updatenews360

மேலும் அவர் அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று விருது வழங்கும் கமிட்டிக்கே கடிதம் ஒன்றையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். இதனை அடுத்து பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும், கமலஹாசன் போலவே எக்கச்சக்க விருதுகளை வாங்கி குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

amitabh bachchan - updatenews360

இதனிடையே, 1969 ஆம் ஆண்டு வெளியான “சாட்ஹிந்துஸ்தானி” என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அமிதாப்பச்சன். தனது அபார வளர்ச்சியின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார். அதிலும் பெஸ்ட் ஆக்டர்காக 15 முறையும், பெஸ்ட் சப்போட்டிங் ஆக்டர்காக 15 முறையும், இந்திய கௌரவ விருதினை 9 முறையும் பெற்று இருக்கிறார்.

amitabh bachchan kamal rajini-updatenews360

இத போன்று இந்திய அரசாங்கம் அமிதாப்பச்சனை கௌரவித்து பல விருதுகளையும் வழங்கியுள்ளது. அதிலும் 2018 ஆம் ஆண்டு திரைத்துறையில் மிக உயரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. இப்படியாக அமிதாப்பச்சன் வாங்கிய விருதுகளை மட்டும் அடுக்கிக் கொண்டே சொல்லலாம்.

amitabh bachchan kamal rajini-updatenews360

அந்த அளவிற்கு பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் ஜாம்பவான் ஆகவே திகழ்ந்து வந்தார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனை போலவே அமிதாப்பச்சனும் அதிரடியான ஒரு முடிவினை எடுத்து இருக்கிறார். அதாவது, இளம் நடிகர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்குங்கள் என்றும், இனிமேல் தனக்கு விருதுகளும், அவார்டுகளும் வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 462

    1

    0