இந்த படத்துக்கு தான் இத்தனை நாள் காத்திருந்தோம்.. இனி அடுத்த படத்திற்கான ‘அப்டேட்’ ஸ்டார்ட் : பிரபல இயக்குநர் பேட்டி!
Author: Vignesh11 January 2023, 5:30 pm
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வாரிசு படம் வாரிசு வெளியானது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ” ரொம்ப நாள் கழித்து விஜய் சார் இப்படி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். வாரிசு படம் வெளியாகதான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களில் விஜய்யின் 67 வது படத்தின் அப்டேட் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.