மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கியதன் தமிழ் மட்டுமல்லாது மொத்த இந்திய திரையுலகில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதில் இன்னும் சிறப்பம்சம் என்னவென்றால், கைதி திரைப்படத்தின் நிறைய reference’ஐ விக்ரம் படத்தில் உபயோகித்து தனக்கே உரித்தான LCU என்னும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் வகையில் திரைக்கதையை இயக்கியிருந்தார். படத்தின் இறுதி காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’.இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஹிட் இயக்குநர் யாரென்றால், நிச்சயம் லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறும் அளவிற்கு, உயர்ந்து உள்ளார். அதேபோல, பல ஹிட் படங்களை கொடுக்கும் இசையமைப்பாளர் யாரென்றால் நிச்சயம் ராக்ஸ்டார் அனிரூத் என்று தெரிவிப்பார்கள்.
இதனிடையே, இவர்கள் இவருவரும் தனித் தனியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளனர், ஆனால் இவர்கள் ஹீரோவாக அதிலும் ஒரே படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்?. நம்ப முடியவில்லை என்றாலும் கோலிவுட் வட்டாரங்களில் அப்படித்தான் பேசப்படுகின்றது.
மேலும், சமுத்திரக்கனி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் இதுகுறித்து தெரிவித்துள்ளார், ஆனால் அவர் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்துள்ளாரே அன்றி லோகேஷ் மற்றும் அனிரூத் ஹீரோக்களாக நடிப்பதாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை. அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை.
மேலும் இந்த புதிய படத்திற்காக லோகேஷுக்கு பேசப்பட்ட சம்பளம் தான் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களை வாயடைக்க வைத்து இருக்கிறது. இன்று விஜய் ஒரு படத்திற்காக எவ்ளோ சம்பளம் வாங்குகிறாரோ அந்த சம்பளத்தில் பாதி சம்பளம் இந்தப் படத்திற்காக லோகேஷுக்கு பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 லிருந்து 60 கோடி வரை இருக்கும் என பேசப்படுகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.