லோகேஷ் கனகராஜுக்கு ஹேப்பி பர்த்டே.. கேக்கில் எல்சியூ, டிசி உடன் துப்பாக்கி..!(வீடியோ)

Author: Vignesh
14 March 2024, 2:42 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh vijay - updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது அவர் அடுத்த 6 மாதத்திற்கு சமூகவலைத்தளத்தில் இருந்து விலக உள்ளாராம். காரணம் ரஜினியின் 171 படத்தின் ஸ்க்ரிப்டை முழு மூச்சுடன் இறங்கி உருவாக்க உள்ளாராம். எனவே 6 மதத்திற்கு லோகேஷ் மிகவும் பிசியாக இருப்பார். இப்படத்தில் ரஜினியின் வில்லன் முகத்தை வெறித்தனமாக இறக்கவுள்ளாராம் லோகேஷ்.

ரஜினி படத்திற்கான தயாரிப்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்த நாளை தன் நண்பர்கள் ஆன இரத்தினகுமார், ஜெகதீஷ், அர்ஜுன்தாஸ் மற்றும் பலருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், லியோ படத்தின் வசனகர்த்தாவும், இயக்குனருமான ரத்னகுமார் தனது எக்ஸ் தள பதிவில் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கேக்கில் எல்சியூ, டிசி என எழுதப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. டிசி திரைப்படங்கள் லோகேஷ்க்கு மிகவும் பிடித்தமானது. எல்சியூ சினிமா டிக்கெட் யுனிவர்ஸ்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 181

    0

    0