அடிச்சு கேட்டாலும் சொல்லக்கூடாது… திரிஷாவை மிரட்டிய லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
12 April 2023, 2:17 pm

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வமுடித்து. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. ஆனால் ரசிகர்கள் தொல்லையால் அங்கிருந்து பேக்கப் செய்து ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

LEO - Updatenews360

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது விழா ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கேட்டதற்கு, படத்தின் ரகசியங்களை இப்போவே சொல்லிவிட்டால் அடுத்த 6 மாசத்துக்கு என்ன இருக்கு சொல்றதுக்கு? அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கொஞ்சம் கொஞ்சமா சொல்றோம். திரிஷாவிடம் கேட்டால் கூட எதுவும் சொல்லமாட்டார் அந்த மாதிரி பேசி வச்சிட்டு தான் வந்திருக்கோம் என திரிஷாவுக்கு Bloody Sweet Warning கொடுத்தார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 556

    4

    0